இன்று நான் கற்ற ஆங்கில வார்த்தை Moonlighting. இதன் அர்த்தம், to hold a second job in addition to a regular one. அமெரிக்காவில் மிக குறைந்த சம்பளத்தில் வேலை செய்பவர்களுக்கு குடும்பம் இருந்தால், அந்த ஒரு சம்பளத்தில் குடும்பத்தை காப்பாற்ற முடியாது. அதனால் அவர்கள் பொதுவாக இரண்டு வேலை செய்ய வேண்டியிருக்கும். முதல் வேலை காலையில் இருந்து மாலை வரைக்கும், இரண்டாவது வேலை மாலையிலிருந்து இரவு வரைக்கும் இருக்கும்.
அமெரிக்கவில் கடந்த செவ்வாய் கிழமை தேர்தல் நடந்தது. அதில் காங்கிரஸில் ( கட்சி அல்ல) டெமொக்ராட்ஸுக்கு பெரும்பான்மை வெற்றி கிடைத்தது. டெமொக்ராடிக் கட்சி சபாநாயகி நான்சி பெலோசி (இந்த பதவிக்கு வரும் முதல் பெண்மனி), அடுத்த சனவரியில் சபை கூடும் போது முதல் வேலையாக, மிக குறைந்த ஊதியத்தை உயர்த்த சட்டம் கொண்டு வருவோம் என்று கூறியுள்ளார். இது அமலுக்கு வந்தால், தற்போதைய $5.15 (ஒரு மணி நேரத்துக்கு) என்ற ஊதியம் படிப்படியாக உயர்த்தப்பட்டு 2008-ல் $7.25 ஆக இருக்கும்.
Thursday, November 09, 2006
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment