நாம் (தமிழர்கள்) அரிசி உணவு வகைகள் அதிகமாக சாப்பிடுகிறோம். தினமும் மதியம் சாப்பாடு சாப்பிடுகிறோம். இரவு இட்லி, தோசை, அடை போன்று பொதுவாக அரிசியால் செய்த உணவை சாப்பிடுகிறோம்.
கடந்த அக்டோபர் 23-ஆம் தேதியில் இருந்து, அரிசியில் செய்த எந்த உணவையும் முப்பது நாட்களுக்கு சாப்பிட போவதில்லை என்று முடிவெடுத்திள்ளேன்.
அரிசியில் (குறிப்பாக நாம் சாப்பிடுகின்ற வெள்ளை பொன்னி பச்சரிசியில்) complex carbohydrates இருந்தாலும் சுத்திகரிக்கப்பட்ட நிலையில் அவை simple carbohydrates-ஆக மாறிவிடும். அதுமட்டுமல்லாமல், சுத்திகரிக்கும் போது வைடமின் மற்றும் மினரல்ஸையும் இழந்துவிடுவோம். முழு கோதுமை மற்றும் பழுப்பு (brown) அரிசியில் complex carbohydrates இயற்கை வடிவில் அப்படியே இருக்கும்.
தினமும் மதியம் என் மனைவி சாம்பார், ரசம், தயிர் என்று ருசியாக சாதம் சாப்பிடும் போது அருகில் சப்பாத்தி சாப்பிடுவது கடினம். இது என்னுடைய தன்னிலை கட்டுப்பாட்டை வளர்க்க உதவும் என்று நம்புகிறேன்.
என்னுடைய இந்த குறிக்கோளுக்கு உதவியாக சமைத்து ஆதரவு அளிக்கும் என் மனைவிக்கு நன்றி!
Tuesday, November 07, 2006
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment