ஏன், எங்கு, எப்பொழுது
Saturday, October 30, 2004
Tuesday, October 26, 2004
உங்கள் மின்னஞ்சல் படமாக
உங்கள் மின்னஞ்சலை படமாக உருவாக்கி தரும் வலைப்பக்கம். பார்க்க அழகாக உள்ளது. வலைப்பக்கத்தில் மின்னஞ்சல் முகவரியை போட விரும்புபவர்கள் spammers-இடம் இருந்து தப்பித்துக்கொள்ள உதவியாக இருக்கும்.
ஜி மெயில் அறிவிப்பு செயலி
ஜி மெயில் உறுப்பினர்கள், வலைப்பக்கம் செல்லாமல் மின்னஞ்சல் வந்திருப்பது அறிந்துகொள்ள இந்த செயலியை பதிவிறக்கம் செய்து நிறுவுக.
Monday, October 25, 2004
Friday, October 15, 2004
கூகிள்
மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று பழைய குறிப்புகளில் இருந்து, மறு பதிவு செய்கிறேன்.
"Search Engine" என்ற வார்த்தைகளை கூகிள் வலைப்பக்கத்தை உபயோகித்து தேடினால், முடிவுகளில் முதலாவதாக வருவது கூகிள் வலைப்பக்கம் அல்ல. மாறாக, அல்டாவிஸ்டா முதலாக வருகிறது. கூகிள் நான்காவதாக வருகிறது.
கூகிள், இணையத்தில் தேடுவதற்கு உபயோகிக்கும் நெறிமுறை சிறந்ததென்று வைத்துக்கொள்வோம். அப்படியென்றால், கூகிள் முடிவுகளின்படி அல்டாவிஸ்டா தான் சிறந்த தேடு பொறி. இது நாம் முதலில் அனுமானித்தற்கு மாறானதாகும்.
தேடுவதற்கு கூகிள் உபயோகிக்கும் நெறிமுறையை சற்று விளக்கமாக பார்ப்போம். நாம் தேடும் சொற்கள் இருக்கும் வலைப்பக்கங்களில், எந்த வலைப்பக்கத்திற்கு, இணையத்தின் மற்ற பக்கங்களில் இருந்து அதிகமான இணைப்புக்கள் இருக்கின்றதோ, அந்த வலைப்பக்கம் முடிவுகளில் முதலாவதாக வரும்.மேலும் தேடும் பக்கத்தை இணைக்கும் பக்கங்களின் மதிப்பை பொறுத்து தேடும் பக்கத்தின் மதிப்பு கூடும். உதாரணத்திற்கு 'அ' என்ற பக்கத்திற்கு 'க' என்ற பக்கத்திலிருந்து இணைப்பு இருக்கின்றது, மற்றும் 'ஆ' என்ற பக்கத்திற்கு 'ங' மற்றும் 'ச' என்ற பக்கங்களில் இருந்து இணைப்பு இருப்பதாகவும் வைத்துக்கொள்வோம். 'அ', 'ஆ' இரண்டு பக்கங்களிலும் 'தேடு' என்ற வார்த்தை உள்ளது. இப்போது, இணையத்தின் மற்ற பக்கங்களில் இருந்து 'க'-விற்கு 10 இணைப்புக்களும், 'ங' மற்றும் 'ச' பக்கங்களுக்கு தலா 2 இணைப்புக்களும் இருக்கிறது. இப்பொது நாம் 'தேடு' என்ற சொல்லை தேடினால், முடிவுகளில் 'அ' 'ஆ'-விற்கு முன்னதாக வரும். ஏனெனில் 'க'-வின் மதிப்பு (10), 'ங' + 'ச' (2+2 = 4) வின் மதிப்பைவிட கூடுதலாக இருப்பதால். (இது க, ங, ச பக்கங்களை இணைக்கும் பக்கங்களின் மதிப்பு ஒன்று என்று வைத்துக்கொண்டால்)
கூகிளின் இந்த தேடுபொறி நெறிமுறை சில ஆண்டுகளுக்கு முன்னால் சிறந்ததாக இருந்திருக்கலாம். ஆனால் தற்போது அதிவேகத்தில் வளர்ந்து வரும் வலைப்பதிவுகளால் (முக்கியமாக அவை பல வலைப்பதிவுகளை இணைப்பதால்), இந்த நெறிமுறை இப்போது மிகச்சிறந்த முடிவுகளை தருவதில்லை. கூகிளின் முடிவுகளில் முதன்மையாக தங்கள் வலைப்பக்கம் வர விரும்பும் தமிழ் வலைப்பதிவாளர்களுக்கு கீழ்கண்ட வலைப்பக்கங்கள் உதவியாக இருக்கும்.
ஒரு வழக்கறிஞரின் பாடம்
Page Rank இறந்துவிட்டது
வலைப்பதிவாளர்களும் கூகிளும்

Thursday, October 14, 2004
புதிய துவக்கம்
வேலை அதிகமாக இருந்ததால் பல மாதங்களாக இந்த பக்கமே வர முடியல.இன்று தான் வேலை பளு கொஞ்சம் கம்மியாக இருக்குது.பழைய குறிப்புகள் அனைத்தையும் அழித்துவிட்டு புதிதாக ஆரம்பிக்கிறேன்.
Subscribe to:
Posts (Atom)