அமெரிக்க டாலர் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய கட்டுரை.
1980-களில் அமெரிக்க அதிபதி ரீகன், வரிகளை 25 சதவிகிதம் வரை குறைத்தார். அதே சமயம், பாதுகாப்பு துறையின் செலவு 134 பில்லியன் டாலரிலிருந்து 290 பில்லியன் டாலராக உயர்ந்தது. செலவுகளை குறைக்காமல், வரிகளை குறைத்தால் ஏற்பட்ட பட்ஜெட் பற்றாக்குறையால், டாலரின் மதிப்பு மூன்றாண்டுகளில் 40% - 50% குறைந்தது. மேலும் படிக்க..
ஆனால், இப்பொழுது - புஷ்-ன் ஆட்சியில், current account deficit (மொத்த ஏற்றுமதி - மொத்த இறக்குமதி) ரீகன் ஆட்சியில் இருந்ததை விட இரண்டு மடங்கு உள்ளது. இது போதாதென்று இராக் போர் வேறு. வரலாற்றில் எந்த ஆட்சியாலரும் போரின் போது வரிகளை குறைத்ததில்லை. அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் Rumsfeld, குறைந்தது நான்கு ஆண்டுகளாவது அமெரிக்க படைகள் இராக்கில் இருக்கும் என்று கூறியுள்ளார். ஜார்ஜ் புஷும் வரிகளை ஏற்றப்போவதில்லை. இது மட்டுமல்லாமல், social security பிரச்சினை வேறு. இதை தீர்க்க எங்கிருந்து பணம் வரும் என்று தெரியவில்லை.
கடந்த மூன்றாண்டுகளில் டாலரின் மதிப்பு யுரோவுடன் ஒப்பிடுகையில் மூன்றில் ஒரு பங்கு (33%) குறைந்துள்ளது. இது ஆரம்பம் தான். கடந்த பிப்ரவரி, இந்தியாவும் ஜப்பானும், தங்கள் டாலர் இருப்புக்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தை யுரோவாக மாற்ற பரிசீலித்து வருவாதாக செய்தி வெளியானது. இரண்டு வாரங்களுக்கு முன்பு, இந்தியாவும் சீனாவும் தங்கள் இருப்புக்களை, யுரோவிற்கு மாற்ற தொடங்கிவிட்டதாக உறிதி செய்யப்படாத செய்தி வெளியானது. அதே சமயம், ரஷ்யாவும் இதே முடிவை எடுத்துள்ளது. மற்ற நாடுகளின் இந்த முடிவினால் டாலருக்கு கிராக்கி இல்லாமல் போகும். அதனால் அதன் மதிப்பு பாதாளத்திற்கு போகும்.
அமெரிக்க டாலரை கடவுளால் கூட காப்பாற்ற முடியுமா என்று தெரியவில்லை.
Tuesday, December 07, 2004
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
உண்மைிழாயே அப்படித்தான் நடக்கணும் . அப்பததான் திமிரு கொஞ்சமாவது கூறாயும்.
Post a Comment