Friday, November 30, 2007
Saturday, February 10, 2007
Voice Mail
powered by ODEO
Voice mail from a 3 year old kid I know.
If you have problems loading the above audio, click here to get the audio file.
Friday, February 09, 2007
New Blog Address
I have a new Blog address.If you have bookmarked this site, you can continue using it. It'll forward to my new address.
Friday, February 02, 2007
Wakeup Call
From a survey of CEOs:
This is the part of your morning routine over which you have the greatest control. To fit it all in, it's a must to start early. The latest any of the surveyed executives wake up is 6 a.m., and almost 80 percent wake up at 5:30 or earlier.
Tapping the Power of Your Morning Routine : Yahoo! Finance [Yahoo Finance]
Tuesday, January 23, 2007
Wednesday, November 15, 2006
I-287 கட்டுமானம்

White Plains-ல் I-287 கட்டுமான பணி கடந்த 3 வாரங்களாக நடந்து வருகிறது. இந்த பணி முடிய மூன்று ஆண்டுகள் ஆகும். சுமார் மூன்று கிலோமீட்டர் பாதையை சரி செய்ய 2250 கோடி இந்திய ரூபாய் செலவாகுமாம்!!! இவ்வளவு அதிக செலவாக காரணம், இந்த இடத்தின் இரு பக்கமும் பாறையாக உள்ளது. ரோட்டை பெரிது படுத்த வெடி வைத்து பாறைகளை தகர்க்க வேண்டும். 2-3 பாலங்களை (flyover) புதிதாக கட்ட வேண்டும். ஆனாலும் மூன்று கி.மீ. க்கு, இது மிக மிக பெரிய செலவாக தோன்றுகிறது. இந்த வழியாக தான் நான் தினம் அலுவலகம் சென்று வருவேன்.
இதை பற்றி மேலும் படிக்க இங்கே செல்லவும் (ஆங்கில கட்டுரை).
Monday, November 13, 2006
அமெரிக்க தேர்தல்
அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட ஒரு நாளில் தான் தேர்தல் நடக்கும். அது நவம்பர் மாதம், முதல் திங்கள் கிழமையை அடுத்த நாள் (செவ்வாய் கிழமை). இது 1845-ல் சட்டமாக்கப்பட்டது. இதற்கு காரணம், நவம்பர் மாதத்தில் அறுவடை முடிந்திருக்கும். அனைவரும் வந்து வோட்டு போட முடியும். ஞாயிறு அனைவரும், கோயிலுக்கு (சர்ச்) செல்வார்கள். அவர்கள் வோட்டு போடும் இடத்திற்கு செல்ல ஒரு நாள் விட்டு (திங்கள்), செவ்வாய் கிழமையை தேர்ந்தெடுத்தார்கள்.
செனட்டில் ஒரு மாநிலத்திற்கு இருவர் என்று 50 மாநிலங்களுக்கு மொத்தம் 100 உறுப்பினர்கள் உள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு உறுப்பினரும் 6 வருடம் பதவியில் இருப்பார். துனை ஜனாதிபதி தான் செனட்டின் தலைவர்.
அமெரிக்கவில் 435 மாவட்டங்கள் (congressional district - சுருக்கமாக இந்த பதிப்பிற்கு மாவட்டம் என்று கூறுவோம்) இருக்கிறது. ஒரு மாவட்டத்தில் சுமார் ஆறு லட்சம் மக்கள் என்று பிரித்துள்ளார்கள். ஒரு மாவட்டத்திற்கு ஒருவர் என்று ஹௌஸ் ஆஃ ரெப்ரெஸெண்டேடிவ்ஸில் தற்போது மொத்தம் 435 உறுப்பினர்கள் உள்ளனர். இங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு உறுப்பினரும் 2 வருடம் பதவியில் இருப்பார்.
ஜனாதிபதியும், துனை ஜனாதிபதியும் 4 ஆண்டுகள் பதவி வகிப்பார்கள்.
ஹௌஸ் ஆஃ ரெப்ரெஸெண்டேடிவ்ஸ் மற்றும் செனட்டில் வெவ்வேறு கட்சிகள் பெரும்பான்மையாக இருக்கலாம். மற்றும் ஜனாதிபதி வேறு ஒரு கட்சியை சேர்ந்தவராகவும் இருக்கலாம். தற்போது 2006 தேர்தலில், ஹௌஸ் ஆஃ ரெப்ரெஸெண்டேடிவ்ஸ் மற்றும் செனட், இரண்டிலும் டெமொக்ராட்ஸ் பெரும்பான்மை கட்சியாக உள்ளது. ஜனாதிபதி ரிபப்ளிகன் கட்சியை சேர்ந்தவர். ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும் என்றால் இந்த இரண்டு குழுக்கள் மற்றும் ஜனாதிபதி சரி என்று சொல்ல வேண்டும்.
- நான்கால் வகுக்க கூடிய ஆண்டுகளில், ஜனாதிபதி தேர்தல் நடக்கும்.
- இரட்டைபடை ஆண்டுகளில், House of Representatives-ற்கும், மூன்றில் ஒரு பகுதி செனட் உறுப்பினர்களுக்கும் தேர்தல் நடக்கும்.
செனட்டில் ஒரு மாநிலத்திற்கு இருவர் என்று 50 மாநிலங்களுக்கு மொத்தம் 100 உறுப்பினர்கள் உள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு உறுப்பினரும் 6 வருடம் பதவியில் இருப்பார். துனை ஜனாதிபதி தான் செனட்டின் தலைவர்.
அமெரிக்கவில் 435 மாவட்டங்கள் (congressional district - சுருக்கமாக இந்த பதிப்பிற்கு மாவட்டம் என்று கூறுவோம்) இருக்கிறது. ஒரு மாவட்டத்தில் சுமார் ஆறு லட்சம் மக்கள் என்று பிரித்துள்ளார்கள். ஒரு மாவட்டத்திற்கு ஒருவர் என்று ஹௌஸ் ஆஃ ரெப்ரெஸெண்டேடிவ்ஸில் தற்போது மொத்தம் 435 உறுப்பினர்கள் உள்ளனர். இங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு உறுப்பினரும் 2 வருடம் பதவியில் இருப்பார்.
ஜனாதிபதியும், துனை ஜனாதிபதியும் 4 ஆண்டுகள் பதவி வகிப்பார்கள்.
ஹௌஸ் ஆஃ ரெப்ரெஸெண்டேடிவ்ஸ் மற்றும் செனட்டில் வெவ்வேறு கட்சிகள் பெரும்பான்மையாக இருக்கலாம். மற்றும் ஜனாதிபதி வேறு ஒரு கட்சியை சேர்ந்தவராகவும் இருக்கலாம். தற்போது 2006 தேர்தலில், ஹௌஸ் ஆஃ ரெப்ரெஸெண்டேடிவ்ஸ் மற்றும் செனட், இரண்டிலும் டெமொக்ராட்ஸ் பெரும்பான்மை கட்சியாக உள்ளது. ஜனாதிபதி ரிபப்ளிகன் கட்சியை சேர்ந்தவர். ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும் என்றால் இந்த இரண்டு குழுக்கள் மற்றும் ஜனாதிபதி சரி என்று சொல்ல வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)